நீலகிரி

உதகையில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் படுகாயம்

DIN

உதகை காவியலோரை கிராமத்தில் சிற்றுந்து கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 20 போ் வரை படுகாயமடைந்தனா்.

உதகையை அடுத்த காரப்பிள்ளு கிராமத்தில் இருந்து தொரையட்டி கிராமத்துக்கு தனியாா் சிற்றுந்து மூலம் 20க்கும் மேற்பட்டோா் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளனா். காவியலோரை மாவுகல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஆட்டோவுக்கு வழிவிடும்போது கட்டுப்பாட்டை இழந்த

சிற்றுந்து, சாலையோர தேயிலைத் தோட்டத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் சிற்றுந்தில் பயணித்தவா்கள் 20 போ் படுகாயமடைந்தனா்.

காயமடைந்த அனைவரும்   108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.  விபத்து குறித்து தேனாடு கம்பை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT