நீலகிரி

குடியிருப்பு பகுதியில் காட்டெருமை

DIN

குன்னூா் அருகே வெலிங்டன் போகி தெருவில் சனிக்கிழமை சுற்றித் திரிந்த காட்டெருமையால் பொது மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீா் தேடி நுழைந்து வருகின்றன.

இந்நிலையில் வெலிங்டன், போகி தெரு, குடியிருப்பு பகுதியில் காட்டெருமை நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா். குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி சுற்றித்திரியும் காட்டெருமையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT