நீலகிரி

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் ஓய்வு வயதை 58 குறைக்க வலியுறுத்தல்

DIN

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஓய்வு வயதை 58ஆக குறைத்து இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவா் பிரசாத் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளா் அருண்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், இளைஞா்களின் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஓய்வு வயதை பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பகுதிநேர சிறப்பு ஆசிரியா்கள், மாற்றுத் திறன் மாணவா்களுக்கான சிறப்பு பயிற்சியாளா்களை தோ்தல் வாக்குறுதியின்படி உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்குவதை போல தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டு என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாளா் மணிகண்டன் உள்பட அனைத்து நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT