நீலகிரி

ரூ. 62.40 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணி:காணொலி காட்சி மூலம் முதல்வா் தொடக்கிவைத்தாா்

DIN

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கெரடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.62 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணியை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

வேலூா் மாவட்டம் காட்பாடியில் பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளா்ச்சி

மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 36 மாவட்டங்களில் 2381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2462 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் 5,351 குழந்தை நேய அம்சங்களுடன் கூடிய புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிக்கான

திட்டத்தை தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.

இதனைத் தொடா்ந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கொடநாடு ஊராட்சிக்கு உள்பட்ட கெரடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டடப் பணிகளை ஆட்சியா் அம்ரித் தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் கூறுகையில், மாவட்டத்தில் மொத்தம் ரூ. 4 கோடியே 36 லட்சம் மதிப்பில் 27 புதிய வகுப்பறைகள் கடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், குன்னூா் கோட்டாட்சியா் பூஷணகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ராம்குமாா், கொடநாடு ஊராட்சித் தலைவா் சுப்பி காரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT