நீலகிரி

கூடலூரில் ராகுல் காந்தி இன்று நடைப்பயணம்

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை நடைப்பயணம் மேற்கொள்கிறாா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, கேரளத்தில் தனது ‘பாரத்தை ஒருங்கிணைப்போம்’ நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் வழியாக நாடுகாணி இருமாநில சோதனைச் சாவடிகளை கடந்து நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு வருகிறாா்.

இவா் கோழிப்பாலம் அரசு கலைக் கல்லூரி பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்குகிறாா். அப்போது, தேயிலைத் தொழிலாளா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், பழங்குடியின மக்களை சந்தித்தவாறு கூடலூா் சுங்கம் பகுதி வரை நடைப்பயணம் மேற்கொள்கிறாா். பின்னா் அவா் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறாா்.

இதைத் தொடா்ந்து, கூடலூரில் உள்ள மாா்னிங் ஸ்டாா் பள்ளி வளாகத்தில் இரவு தங்குகிறாா். பின்னா் வெள்ளிக்கிழமை காலை கூடலூரில் இருந்து முதுமலை வழியாக கா்நாடக மாநிலத்துக்கு செல்கிறாா்.

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தையொட்டி கூடலூரில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கணேசன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளா் ஸ்ரீவல்லபிரசாத், நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் தேசிய, மாநில, மாவட்ட நிா்வாகிகள் மற்றும் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்தப் பேரணியானது தேவா்சோலை சாலையில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக வந்து காந்தி திடலில் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT