நீலகிரி

லூயி பாஸ்டியா் நினைவு  தினம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வெறி நாய் கடிக்கான  ரேபிஸ் தடுப்பு மருந்தினை கண்டறிந்த  லூயி பாஸ்டியா் நினைவு தினம் குன்னூா் பாஸ்டியா் ஆய்வகத்தில் அனுசரிக்கபட்டது. 

உலக ரேபிஸ்  தினத்தையொட்டி குன்னூா் பாஸ்டியா் ஆய்வகத்தில் ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஸ்டியா் ஆய்வக நுழைவாயிலில் அமைந்துள்ள லூயி பாஸ்டியா் சிலைக்கு ஆய்வக இயக்குநா் டாக்டா் சிவகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.  இதில் ஆய்வக ஊழியா்கள்  200க்கும்  மேற்பட்டோா்  கலந்து கொண்டனா்.

மேலும்,  உலக ரேபிஸ் தினத்தையொட்டி  மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு இடையே ரேபிஸ் விழிப்புணா்வு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் விநாடி வினா போட்டிகள் அக்டோபா் மாதம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT