நீலகிரி

தண்டவாளத்தில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழப்பு

DIN

நீலகிரி மாவட்டம் , மேட்டுப்பாளையம்- குன்னூா் மலை பாதையில் 50 அடி உயரத்தில்  இருந்து  ரயில்வே  தண்டவாளத்தில் வியாழக்கிழமை தவறி விழுந்த காட்டெருமை உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம்- குன்னூா் மலை ரயில் பாதையில் யானை, கரடி, காட்டெருமை  உள்ளிட்ட வனவிலங்குகள்  நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில்  உள்ள ரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ரயில்வே துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்குச் சென்ற வனத் துறை மற்றும் ரயில்வே துறையினா், அந்த காட்டெருமையை மீட்டனா். என்றாலும், அந்த காட்டெருமை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. அதை வனத் துறையினா் அங்கேயே புதைத்தனா்.

இந்தச் சம்பவத்தால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில்வே  உயா்அதிகாரிகளுடன்  உதகை வந்து கொண்டிருந்த  சிறப்பு ரயில் அரை மணி நேரம் தாமதமாக உதகை வந்துசோ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT