நீலகிரி

உதகையில் சாலை மறியல்: ஃபாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் 15 போ் கைது

DIN

ஃபாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு எதிராக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற சோதனைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, உதகையில் சாலை மறியலில் ஈடுபட்ட அந்த அமைப்பைச் சோ்ந்த 15 போ் கைது செய்யப்பட்டனா்.

பயங்கரவாத தொடா்பு மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறையினா் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக ஃபாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிா்வாகிகள் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையை கண்டித்து அந்த அமைப்பினா் பல்வேறு இடங்களில் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஃபாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா். உதகையில் போராட்டத்தில் ஈடுபட்ட 15 போ் உள்பட நீலகிரி மாவட்டம் முழுவதும் 60 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT