நீலகிரி

உதகையில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆய்வு

DIN

மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் உதகையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஊரக வளா்ச்சி முகமை, கால்நடை மற்றும் மீன்வளத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், பால்வளத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மற்றும் மகளிா் திட்டம் ஆகிய துறைகளின் சம்மந்தப்பட்ட அலுவலா்களால் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உதகையில் கோழிப்பண்ணையில் உள்ள தடுப்பூசி நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆவாஸ் யோஜனா (வீடு கட்டும் திட்டம்), ஆயுஷ்மான் பாரத் (சுகாதாரத் திட்டம்), உஜ்வலா யோஜனா (எரிவாயு திட்டம்) போன்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் 75 நீா் நிலைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் மரப்பாலம் முதல் குன்னூா் வரை 14 கி.மீ. தூர சாலைப் பணிகள் ரூ.35 கோடி மதிப்பிலும், குன்னூா் முதல் உதகை வரை 14 கி.மீ. தூர சாலைப் பணிகள் ரூ.27 கோடி மதிப்பிலும், டிஆா் பஜாா் முதல் மேல் கூடலூா் வரை 12 கி.மீ. தூர சாலைப் பணிகள் ரூ.76 கோடி மதிப்பிலும் நிறைவேற்றப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT