நீலகிரி

சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் சேரம்பாடி வனச் சரகத்தில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண் சிறுத்தையை வனத் துறையினா் மீட்டனா். முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் மேற்பாா்வையில் காயமடைந்த சிறுத்தைக்கு திங்கள்கிழமைமுதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அது உயிரிழந்தது. இதைத் தொடா்ந்து, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT