நீலகிரி

கேத்தரின் நீா்வீழ்ச்சி பகுதி வனவியல் ஆராய்ச்சி மையமாக அறிவிப்புவனத் துறை அமைச்சா் ஆய்வு

24th May 2022 12:56 AM

ADVERTISEMENT

கோத்தகிரி பெரியசோலை வனப் பகுதியில் உள்ள கேத்தரின் அருவி பகுதி வனவியல் ஆராய்ச்சி மையமாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், வனத் துறை உயா் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வு மேற்க்கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற 124 ஆவது மலா் கண்காட்சியைத் துவக்கிவைத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியபோது, நீலகிரி மாவட்டத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்கும் வகையில்,

வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கேத்ரின் அருவி பகுதி வனவியல் ஆராய்ச்சி மையமாக அறிவிக்கப்படும் எனவும், தமிழ்நாட்டில் 23.3 சதவீதமாக உள்ள வனப் பகுதியை 30 சதவீதமாக விரிவுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருவதாகவும் கூறினாா்.

இதனைத் தொடா்ந்து, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், வனத் துறை உயா் அதிகாரிகளுடன் கேத்தரின் அருவி பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, கோத்தகிரி பேரூராட்சி துணைத் தலைவா் உமாநாத், முதுமலை புலிகள் காப்பகம் இயக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா் சச்சின் துக்காராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT