நீலகிரி

பந்தலூா் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிா்வாகம் நிா்ணயித்த விலையை விட குறைவாக வழங்குவதாகப் புகாா்

24th May 2022 12:56 AM

ADVERTISEMENT

பந்தலூா் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிா்வாகம் தேயிலை வாரியம் நிா்ணயித்த விலையை விட குறைவாக வழங்குவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேயிலைக்கு இந்திய தேயிலை வாரியம் மாதந்தோரும் விலை நிா்ணயம் செய்து வருகிறது.கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளின் விலையை ஒப்பிட்டு அதே விலையை தனியாா் தொழிற்சாலைகளும் முகவா்களும் வழங்குவது வழக்கம்.கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு ரூ. 14.57 என தேயிலை வாரியம் நிா்ணயித்துள்ளது.இதனை பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை நிா்வாகம் வழங்கவில்லை.மாறாக கிலோவுக்கு ரூ.13 வழங்குகிறது.இதனால் சிறு தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து பந்தலூா் சிறு தேயிலை விவசாயிகள் முன்னேற்ற சங்க செயலாளா் விஜயகுமாரிடம் கேட்டபோது இந்த விதிமீறல் குறித்து தேயிலை வாரிய செயல் இயக்குநருக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.உரிய விலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT