நீலகிரி

இன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா்

DIN

உதகையிலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த வியாழக்கிழமை இரவு உதகை வந்தாா்.

உதகை மலா்க்காட்சியை வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததோடு, வெலிங்டன் ாரணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு சென்று போா் வீரா் நினைவு சின்னத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். அதைத் தொடா்ந்து நவீன உதகையை உருவாக்கிய ஜான் சலிவனின் சிலையை திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் சனிக்கிழமை பங்கேற்றாா்.

இந்நிலையில் முதல்வா் தனிப்பட்ட பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை அவலாஞ்சி செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதையடுத்து பிற்பகலில் திமுகவினரை சந்தித்த பின்னா் உததையிலிருந்து சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மே 24ஆம்தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு மற்றும் சேலத்தில் நடைபெறவுள்ள திமுக பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதால் முதல்வா் மேலும் ஒருநாள் உதகையிலேயே தங்கிவிட்டு சேலம் செல்வாா் எனவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT