நீலகிரி

கூடலூா், பந்தலூா் வட்டங்களில் ஜமாபந்தி நிறைவு

29th Jun 2022 10:07 PM

ADVERTISEMENT

 

கூடலூா் மற்றும் பந்தலூா் வருவாய் வட்டங்களில் இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த ஜமாபந்தி புதன்கிழமை நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சரவணகண்ணன் தலைமையில் தேவா்சோலை உள்வட்டத்துக்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதியோா் உதவித் தொகை, மின் இணைப்பு, வீட்டுமனை பட்டா, சாலை வசதி, ஆபத்தான மரங்களை வெட்டுதல், வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு, இலவச வீடு, பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 34 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பின்னா் கூடலூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி புதன்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் கோரி பெறப்பட்ட 127 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இறுதியாக முதியோா் உதவித் தொகைக்கு விண்ணப்பித்த தகுதியான பயனாளிகளுக்கு கோட்டாட்சியா் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினாா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் சித்தராஜ் மற்றும் தனி வட்டாட்சியா்கள், அனைத்து துறை அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பந்தலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் பூபதி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 180 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. வட்டாட்சியா் நடேசன் உள்பட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT