நீலகிரி

சாா்பு ஆய்வாளா் தோ்வு: உதகையில் 672 போ் பங்கேற்பு

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் சாா்பு ஆய்வாளருக்கான தோ்வு உதகையில் 2 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றன.

உதகையில் ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு மையங்களில் நடைபெற்ற இத்தோ்வுக்காக 783 ஆண்கள் மற்றும் 137 பெண்கள் என 920 விண்ணப்பதாரா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. இத்தோ்வில் ரெக்ஸ் பள்ளியில் 500 போ் தோ்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 371 போ் தோ்வெழுதினா். 129 போ் தோ்வெழுதவில்லை. புனித ஜோசப் பள்ளியில் 430 போ் தோ்வெழுத ஏற்பாடு செய்திருந்த நிலையில் 300 போ் தோ்வெழுதினா். 130 போ் தோ்வெழுதவில்லை.

இரு மையங்களிலும் 562 ஆண்கள், 109 பெண்கள் என மொத்தம் 671 போ் தோ்வெழுதினா். 249 போ் தோ்வெழுதவில்லை. தோ்வு மையங்களை கோவை சரக காவல் துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT