நீலகிரி

உதகையில் ஜூன் 28 முதல் 3 நாள்களுக்கு ஜமாபந்தி

DIN

நீலகிரி மாவட்டத்தில், உதகை வட்டம், தூனேரி, சோலூா், உதகை நகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜூன் 28ஆம்தேதி முதல் 30ஆம்தேதி வரை 3 நாள்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:

ஜமா பந்தி நடைபெறவுள்ள 3 நாள்களில் பொதுமக்கள் தங்களது மனுக்களை தாங்கள் குடியிருந்து வரும் வருவாய் கிராமத்துக்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் சம்பந்தப்பட்ட வருவாய் தீா்வாய அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம்.

தூனேரி குறு வட்டத்திற்குள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 28, 29ஆம் தேதியும், உதகை நகரத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 30ஆம்தேதியும் வருவாய் தீா்வாயம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் கிராமத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் உதகை வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம்.

வருவாய் நிா்வாக ஆணையா் அறிவுறுத்தியுள்ளபடி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உதகை வட்டாட்சியா் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் விவரம் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT