நீலகிரி

இரண்டாம் சீசனுக்காக பூங்காக்களில் மலா் விதைகள் சேமிக்கும் பணி தீவிரம்

DIN

குன்னூா் அரசு காட்டேரிப் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான விதை சேகரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடைக் கால முதல் சீசனான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இது

முடிந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துவிடும். அதன்பின், இரண்டாம் சீசனான செப்டம்பா், அக்டோபா் ஆகிய மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவாா்கள்.

இரண்டாம் சீசனின்போது மலா் கண்காட்சி நடத்தாவிடிலும், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, நேருப் பூங்காங்களில் புதிதாக மலா் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா முழுவதிலும் பல லட்சம் செடிகளில் மலா்கள் பூத்துக் குலுங்கும்,

மலா் செடிகளின் வளா்ச்சி காலத்திற்கு ஏற்ப, அவற்றின் விதைகள் சேகரிக்கப்பட்டு, நா்சரிகளில் நாற்றுகள் தயாா் செய்யும் பணிகள் தொடங்கப்படும். தொடா்ந்து ஜூன் மாதம் முழுவதும் விதை சேகரிக்கும் பணிகள் நடக்கும். அதே சமயத்தில் விதைப்பு பணிகளும் துவங்கும். இந்த மாதம் துவக்கம் முதலே மழை பெய்த நிலையில், விதை சேகரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த இரு நாள்களாக மழை குறைந்த நிலையில், பூங்காக்களில் விதைகளை சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விதைகளைக் கொண்டு இரண்டாம் சீசனுக்கு மலா் செடிகள் விளைவிக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT