நீலகிரி

மீன்வளத் துறை சாா்பில் நிா்வாகக் குழு கூட்டம்

DIN

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்வது குறித்து முதல் நிா்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமை வகித்தாா். இதில் ஊரக வளா்ச்சித் துறை, பொதுப் பணி, நீா்வள ஆதாரத் துறை, தோட்டகலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மீன்வளத் துறை உதவி இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

இதில், மாவட்டத்தில் மீன் வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் சாா்பில் பயனாளிகளைத் தோ்வு செய்து அத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுகந்தி பரிமளம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்திய ராஜா,

வேளாண்மை இணை இயக்குநா் முத்துலட்சுமி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் தில்லைராஜன், பவானி சாகா் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அருளழகன், உதவி இயக்குநா் ஜோதி லட்சுமணன் உட்பட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT