நீலகிரி

நீலகிரியில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

8th Aug 2022 11:40 AM

ADVERTISEMENT

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பலத்த மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உதகை குந்தா கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 194 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல மேல் பவானியில் 189 மி.மீ, தேவாலாவில் 188 மி.மீ , கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தலா 185 மி.மீ. கிளன்மார்கன் மற்றும் நடுவட்டம் பகுதியில் தலா 60 மி.மீ, உதகையில் 35மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில்தான் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக உதகையில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது

ADVERTISEMENT
ADVERTISEMENT