நீலகிரி

பழங்குடியினா் கிராமங்களில் மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

குன்னூா், கோத்தகிரியைச் சுற்றியுள்ள எல்லையோர கிராமங்களில் உள்ள ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கான குறைதீா் கூட்டம் காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

மஞ்சூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிண்ணக்கொரை, கொலக்கொம்பை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஆனைப்பள்ளம், கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மெட்டுக்கல், கம்பையூா், பாவியூா், கோழிகுட்டை, மசினகுடி காவல் நிலைய

எல்லைக்கு உள்பட்ட ஆனைக்கட்டி, நியூஹோப் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட

பாரதி நகா், அய்யப்பன்மட்டம், செல்வபுரம், தேவாலா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கூவமூலா, 10 நம்பா் பனியா் காலணி ஆகிய ஆதிவாசி கிராமங்களில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில், அனைத்துத் துறையைச் சாா்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டு ஆதிவாசி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். தொடா்ந்து கோரிக்கை தொடா்பான 235 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினா், காவல் துறையினா் தெரிவித்தனா். முகாம்களில் மொத்தம் 418 ஆதிவாசி மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT