நீலகிரி

நீலகிரியில் குறைந்து வரும் கரோனா தாக்கம்

DIN

நீலகிரியில் கரோனா தாக்கம் குறைந்து வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா், பந்தலூா், குந்தா ஆகிய இடங்களில் இதுவரை 5 லட்சத்து 4,727 பேருக்கு கரோனா சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் 85 சதவீதத்தினா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியோா் எண்ணிக்கை 21,821ஆக உயா்ந்துள்ளது.

மேலும், மருத்துவமனைகள், கரோனா தொற்று மையங்களில் சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 3602ஆக உள்ளது. கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்டோா் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 135 போ் உயிரிழந்துள்ளனா். தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 25,516ஆக உள்ளது. மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள், இணை நோயாளிகள், பொதுமக்கள் என இதுவரை 2 லட்சத்து 8,398 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, பொதுமக்கள் வீட்டைவிட்டு அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும்போது 2 முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT