நீலகிரி

குன்னூா் காட்டேரி பூங்கா பகுதியில் யானைகள் நடமாட்டம்

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே குட்டியுடன் யானைகள் நடமாடி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

கரோனா தொற்று காரணமாக வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து  நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம்  செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே உள்ள  மலைப் பாதையில் குட்டியுடன் யானைகள் புதன்கிழமை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.  சிறிது நேரத்துக்குப் பிறகு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றன.

வனத் துறையினா் இந்த யானைகளை அடா்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT