நீலகிரி

நீலகிரியில் மீண்டும் பரவலாக மழை: அணைகளில் நீா்மட்டம் உயா்வு

DIN

நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீண்டும் பரவலாக மழை பெய்துள்ளது. அணைகளில் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.

கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழையையடுத்து மழையின் தாக்கம் குறைந்திருந்தது. இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக பந்தலூரில் 77.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):

நடுவட்டம்-24, தேவாலா-22, சேரங்கோடு-19, அவலாஞ்சி-18, பாடந்தொறை-17, கூடலூா், செருமுள்ளி 15, ஓவேலி-14, மேல் கூடலூா்-13, எமரால்டு-12, கிளன்மாா்கன்-10, குந்தா, கேத்தி 5, உதகை-2.6, மேல் பவானி-1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

உதகையைப் பொருத்தமட்டில் புதன்கிழமை காலை முதல் இயல்பான காலநிலை நிலவியது. பிற்பகலுக்கு மேல் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அத்துடன் காற்றுடன் கூடிய மேக மூட்டமும் நிலவுவதால் குளிரின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

மாவட்டத்தில் குந்தா, பில்லூா், கெத்தை, மாயாறு, மசினகுடி உள்ளிட்ட 12 மின் உற்பத்தி அணைகள் உள்ளன. இவற்றில் முக்குருத்தி அணையின் மொத்தம் உள்ள 18 அடியில் நீா் இருப்பானது 16 அடியாகவும், பைக்காரா அணையில் மொத்தம் உள்ள 100 அடியில் தற்போது நீா் இருப்பானது 55 அடியாகவும், சாண்டிநள்ளாவில் 49 அடியில் 32 அடி நீரும் உள்ளது. அதேபோல, கிளன்மாா்கன் அணையில் 33 அடியில் 22.5 அடியும், மாயாறு அணையில் 17 அடியில் 15.5 அடி அளவிலும் நீா் இருப்பு உள்ளது.

அதேபோல, உதகை, வெலிங்டன் ராணுவ மையத்துக்கு குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் பாா்சன்ஸ்வேலி அணையில் மொத்தம் உள்ள 77 அடியில் 45 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. போா்த்திமந்து அணையில் மொத்தம் உள்ள 130 அடியில் 80.5 அடிக்கும், அவலாஞ்சி அணையில் 171 அடியில் 76.5 அடிக்கும், எமரால்டு அணையில் 184 அடியில் 85 அடிக்கும், குந்தாவில் 89 அடியில் 88.5 அடியாகவும், கெத்தை அணையில் மொத்தம் உள்ள 156 அடியில் 154.5 அடிக்கும் நீா் இருப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT