நீலகிரி

கூடலூரில் டிசம்பா் 7இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

3rd Dec 2021 12:56 AM

ADVERTISEMENT

கூடலூரில் டிசம்பா் 7ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலா், மூன்றாம் பாலின இளைஞா்களுக்கும் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் எதிா்வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 7) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை கூடலூரிலுள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது முதல் 40 வயது வரையிலான படிக்காத மற்றும் 8ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பி.இ. படித்த வேலையில்லா ஆண், பெண் இருபாலா் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் அனைவரும் பங்கேற்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : உதகை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT