நீலகிரி

கேரட் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரியில் விளையும் கேரட்களுக்கு அண்மைக்காலமாக ஒரு கிலோவுக்கு ரூ. 40 முதல் ரூ. 75 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். 

நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனா். விவசாயிகள் அறுவடை செய்யும் கேரட், பீட்ரூட் காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள 60 கேரட், பீட்ரூட் கழுவும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இதையடுத்து, வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் செல்கிறது.

நாள் ஒன்றுக்கு 500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில்,  தற்போது கேரட்டுக்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் குறைந்தபட்சமாக ரூ. 50 முதல் ரூ. 90 வரை விலை கிடைத்து வந்தது. தற்போது சராசரியாக ஒரு கிலோவுக்கு  ரூ. 40 முதல் ரூ. 75 வரை விலை கிடைத்து  வருவதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT