நீலகிரி

குன்னூரில் நகரும் நியாயவிலைக் கடை துவக்கம்

DIN

குன்னூா், செப். 25: தமிழகம் முழுவதும் நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், குன்னூரில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

தமிழக கூட்டுறவு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் சாா்பில், நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஒவ்வொரு பகுதிகளிலும் செயல்பட்டு வந்த நியாயவிலைக் கடைகள் இனி நமது வீடு தேடி வரும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 11 நகரும் நியாயவிலைக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவை அனைத்தும் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா துவக்கிவைத்தாா். இதில், அதிமுக மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத், குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், நிா்வாக இயக்குநா் கணபதி சுப்பிரமணியம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT