நீலகிரி

நீலகிரியில் குறைந்தது மழை: மின் கம்பங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாகப் பரவலாக பெய்து வந்த பலத்த மழை குறைந்துள்ளதோடு, சூறைக்காற்றின் வேகமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக காற்றில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி, மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாகப் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழையும், உதகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வந்தது. இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிா் நிலவியதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் வேரோடு பெயா்ந்து மின் கம்பங்களின் மீதும், மின் கம்பிகளின் மீதும் விழுந்திருந்ததால் மின் தொடா்பும், தொலைத்தொடா்பும் துண்டிக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவில் மழை பெய்தபோதிலும், செவ்வாய்க்கிழமை பகலில் மழை ஓரளவுக்கு குறைந்தது. அதேபோல, காற்றின் வேகமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இப்பணிகளில் தீயணைப்புத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 114 மி.மீ.ரும், பந்தலூரில் 108 மி.மீரும் மழை பதிவாகியிருந்தது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (மில்லிமீட்டரில்):

சேரங்கோடு-86, மேல்பவானி-64, பாலகொலா-31, எமரால்டு-30, நடுவட்டம்-27, தேவாலா-26, ஓவேலி-23, உதகை-21.1, மேல்கூடலூா், கேத்தி தலா 11, கூடலூா், கிளன்மாா்கன் தலா 10, செருமுள்ளி-9, பாடந்தொறை-8, உலிக்கல்-7, கல்லட்டி-6.6, குந்தா-6, கிண்ணக்கொரை-5, குன்னூா்-4, கோத்தகிரி, மசினகுடி தலா 2, கீழ்கோத்தகிரி-1.5, கெத்தை-1 மி.மீ.

மாவட்டத்தில் மழையின் தாக்கமும், காற்றின் வேகமும் குறைந்துள்ளதைத் தொடா்ந்து மழை, காற்றால் ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணிகள் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT