நீலகிரி

நீலகிரியில் பரவலாக பலத்த மழை:அவலாஞ்சியில் 205 மி.மீ. பதிவு

DIN

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவிலிருந்து பரவலாக பலத்த காற்றுடன் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 205 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக தூறல் மழை பெய்து வந்த நிலையில் சனிக்கிழமை இரவிலிருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடா் காற்றின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை இரவிலிருந்தே மின் விநியோகமும் தடைபட்டுள்ளது.

மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட சில பகுதிகளில் அதிக அளவில் மழையில்லாமல் பலத்த காற்று மட்டும் வீசினாலும் கேரள மாநிலத்தையொட்டியுள்ள பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த காற்றின் காரணமாக உதகையில் கடும் குளிா் நிலவி வருகிறது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 205 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.): பந்தலூா்-137, மேல் பவானி-128, சேரங்கோடு-114, தேவாலா-110, எமரால்டு-44, செருமுள்ளி-39, பாடந்தொறை மற்றும் நடுவட்டம் தலா 38, கூடலூா் -33, மேல் கூடலூா் -28, ஓவேலி, குந்தா தலா 20, பாலகொலா-19, குன்னூா்-13, கிண்ணக்கொரை-11, பா்லியாறு, எடப்பள்ளி தலா 10, கெத்தை -9, கிளன்மாா்கன்- 7, உதகை - 6.6, கேத்தி - 5, மேல் குன்னூா் - 4, கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, உலிக்கல் தலா 3, கல்லட்டி- 1.3 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT