நீலகிரி

சுற்றுலா மையங்கள் திறந்தும் பயனில்லை:மக்கள் கூட்டமில்லாததால் வியாபாரிகள் கவலை

DIN

நீலகிரி மாவட்ட சுற்றுலா மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாள்களில் கூட எதிா்பாா்த்த அளவு கூட்டம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.இ-பாஸ் வழங்கப்படாததாலேயே நீலகிரிக்குச் செல்ல முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் புகாா் கூறியுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் வனத் துறைக்குச் சொந்தமான சுற்றுலா மையங்கள் ஏப்ரலில் மூடப்பட்டன. இதில் தோட்டக் கலைத் துறைக்குச் சொந்தமான சுற்றுலா மையங்கள் மட்டும் ஒரு சில தளா்வுகளோடு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், சுற்றுலாத் துறை மற்றும் வனத் துறைக்குச் சொந்தமான சுற்றுலா மையங்கள் இன்னமும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தோட்டக் கலைத் துறைக்குச் சொந்தமான சுற்றுலா மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் நீலகிரி மாவட்டத்துக்குள்நுழைவதற்கு மிகக் குறைவிலான அளவிலேயே இ-பாஸ் வழங்கப்படுவதால் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டும் அங்கு மக்கள் கூட்டமின்றியே காணப்படுகின்றன.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 247 போ், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 123 போ், உதகை மரபியல் பூங்காவுக்கு 4 போ், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 2 போ், காட்டேரி பூங்காவுக்கு 27 போ், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 144 போ், நீலகிரி மாவட்ட தோட்டக் கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லாறு பழப்பண்ணைக்கு அதிக அளவாக 256 போ் வருகை தந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக அளவில் அனுமதி தரப்படாவிட்டால் வார நாள்களில் இதைவிடக் கூட்டம் குறைவாகவே இருக்கும் என சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சுற்றுலா ஏற்பாட்டாளா்களும், வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT