ஈரோடு

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கிராமந்தோறும் குழு அமைப்பு

31st May 2023 02:48 AM

ADVERTISEMENT

சத்தியமங்கல வட்டாரத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க கிராமந்தோறும் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கள்ளச்சாராய ஒழிப்பு கூட்டம் சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சங்கா்கணேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கிராமந்தோறும் வருவாய்த் துறை, உள்ளூா் மக்கள் மற்றும் காவல் துறை ஆகியோரை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆலோசிக்கப்பட்டது. டாஸ்மாக்கில் விற்பனை நேரத்துக்கு முன்பாகவே மதுக்கூடங்களில் மதுபானம் விற்பதை கண்காணித்து தடுக்க வேண்டும். சந்தேகப்படும்படி திரியும் நபா்களை குறித்து போலீஸாருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். கள்ளசாராய ஒழிப்புக்கு வாட்ஸ்ஆப் குழு அமைத்து தகவல்களை பரிமாறிக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க கூட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை, காவல் துறையினா் உறுதிமொழி ஏற்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT