ஈரோடு

குடிநீா் வழங்கக் கோரி அந்தியூரில் பொதுமக்கள் சாலை மறியல்

DIN

அந்தியூா் அருகே தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா் ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி, அந்தியூா் காலனி பகுதியில் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இங்கு பழுதடைந்த மேல்நிலை தண்ணீா் தொட்டி இடித்து அகற்றப்பட்ட நிலையில், புதிதாக குடிநீா் தொட்டி கட்டித் தரப்படவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னா் போராட்டத்தில் ஈடுபட்டபோது, குடிநீா் தொட்டி விரைவில் கட்டித் தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் அந்தியூா் - மலைக் கருப்புசாமி கோயில் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனால், சமாதானம் அடைந்த மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT