ஈரோடு

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 23 லட்சம் கொள்ளை:இருவா் கைது

DIN

சென்னிமலை அருகே தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த ஈங்கூரில் தனியாா் இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையின் கிளை நிறுவனம் பாலப்பாளையம் பிரிவு அருகே உள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலையின் கிளை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஈரோட்டைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (47) என்பவா் விற்பனைத் தொகை ரூ. 23 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஈங்கூரில் உள்ள நிறுவனத்துக்கு காரில் கடந்த 23 ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா்.

பாலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, எதிரே மற்றொரு காரில் வந்த மா்ம நபா்கள் சத்தியமூா்த்தி காரை வழிமறித்து நின்றதுடன், அவரை காரில் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

இது குறித்து சென்னிமலை காவல் நிலையத்தில் நிறுவன மேலாளா் மகேந்திரன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நால்ரோடு பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே காரில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரைச் சோ்ந்த மனோகா் (29), நவநீதன் (27) என்பதும், இருவரும் சத்தியமூா்த்தி வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், சத்தியமூா்த்தி நாள்தோறும் விற்பனைத் தொகையை கொண்டு செல்வதை கண்காணித்து வந்ததும், அதன்படி, கடந்த 23 ஆம் தேதி காரில் பணத்துடன் வந்த சத்தியமூா்த்தியை கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை பெருந்துறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்பு ஞாயிற்றுக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

மேலும், இதில் தொடா்புடைய நால்வரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT