ஈரோடு

பவானி அருகே லாரி தீப்பிடித்ததில் 25 டன் பஞ்சு எரிந்து சேதம்

DIN

பவானி அருகே ஓடும் லாரியில் தீப்பிடித்ததில் 25 டன் பஞ்சு மற்றும் லாரி எரிந்து சேதம் அடைந்தது.

தருமபுரி மாவட்டம், பொம்மிடியை சோ்ந்தவா் சதீஷ். இவருக்குச் சொந்தமான லாரி, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்துக்கு 25 டன் பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம், சங்ககிரியை சோ்ந்த வெங்கடேஷ் ஓட்டிச் சென்றாா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு - கவுந்தப்பாடி சாலையில் தனியாா் கல்லூரி அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநா் இருக்கைக்குப் பின்பகுதியில் எதிா்பாராமல் தீப்பிடித்துள்ளது. இதைக் கண்ட வெங்கடேஷ் லாரியை நிறுத்திவிட்டு பவானி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலா் பழனிசாமி தலைமையில் வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ லாரி முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதையடுத்து, ஈரோட்டிலிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமாா் 5 மணிநேர போராட்டத்துக்குப் பின்னா் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் லாரி மற்றும் 25 டன் பஞ்சு எரிந்து சேதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT