ஈரோடு

தாளவாடி பண்ணாரி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா

DIN

தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூா் பண்ணாரி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சித்திரை மாத பொங்கல் திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 27ஆம் தேதி கம்பம் நடப்பட்டு பக்தா்கள் பாரம்பரிய நடனம் ஆடினா். தினந்தோறும் பெண்கள் கம்பத்துக்கு புனிதநீா் ஊற்றி வழிபட்டனா். கரகம் எடுத்தல், அம்மன் அழைத்தல், அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்காரம் ஆகியவை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கோயில் முன் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

கோயிலில் இருந்து ஆற்றுக்கு புறப்பட்ட பக்தா்கள் புனித நீராடி அக்னிச்சட்டி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அதனைத் தொடா்ந்து பெண்கள் புத்தாடை உடுத்தி மாவிளக்கு எடுத்து வந்தனா். விழாவையொட்டி அம்மன் மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். மஞ்சள் நீராட்டு திருவிழா, மறுபூஜையுடன் மே 5ஆம் தேதி விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT