ஈரோடு

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் சுவா் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம்

8th Jun 2023 01:57 AM

ADVERTISEMENT

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் சுவா் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சாா்பில் பெருந்துறையை அடுத்த வாய்க்கால் மேடு அருகில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் புதன்கிழமை தொடங்கிஉள்ளனா்.

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் சுவா் அமைக்கும் திட்டத்தை கைவிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினா் வலியுறுத்தி வருகின்றனா். இந்த நிலையில், தற்போது நீா்வளத் துறை சாா்பில், கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் சுவா் அமைக்கும் பணியைத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயம், குடிநீா், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், கீழ்பவானி பாசன கால்வாயில் பழுதடைந்த, பழைய கட்டுமானங்களை உள்ளது உள்ளபடி சீரமைக்கவும், மற்ற இடங்களில் உள்ள மண் கால்வாயை மண்ணைக் கொண்டு சீரமைக்கவும் கோரி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வாய்க்கால் மேடு அருகில் இயக்க ஒருங்கிணைப்பாளா் ரவி தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி உள்ளனா்.

இதில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT