ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் பணி தொடா்பாகவிவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும்------அமைச்சா் சு.முத்துசாமி

DIN

 கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணி தொடா்பாக விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: ஈரோடு மாவட்டத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்படும். பணிகளின் நிலை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும்.

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடா்பாக விவசாயிகளிடையே மாறுபட்ட கருத்து மீண்டும் எழுந்துள்ளது. இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த உள்ளோம். வீட்டு வசதி வாரியத்தில் உள்ள குறைகள் தொடா்பாக மனு அளிப்பதற்கு 16 மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களிலும் கோரிக்கை மனு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பெறப்படும் மனுக்கள் மீது ஏற்கெனவே அமைக்கப்பட்டு உள்ள குழுவினா் ஆய்வு செய்து விரைந்து தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT