ஈரோடு

தேங்காய் கொள்முதல் விலை கடும் சரிவு: விவசாயிகள் கவலை

DIN

தேங்காய் கொள்முதல் விலை ரூ.8 ஆக சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 1 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை வெப்பம் உச்சமடையும் பருவத்தில், தேங்காய் உற்பத்தியும் அபரிமிதமாக இருக்கும். ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகமாக இருக்கும். வரத்து அதிகம் காரணமாக, விலை சற்றுக் குறைவது வழக்கம் என்றாலும் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ள விலை சரிவு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எண்ணிக்கையில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒரு தேங்காயை ரூ.12 முதல் ரூ.14க்கு வாங்கி வந்தனா். தற்போது ரூ.8க்கு விலையை குறைத்து கேட்பதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தென்னை நீண்டகாலப் பயிா், விலை சரிவு என்பதற்காக உடனடியாக வேறு பயிருக்கு மாறிவிட முடியாது. கரோனா உச்சத்தில் இருந்த காலத்தில்கூட ரூ.16 முதல் ரூ.18க்கு குறையாமல் விற்கப்பட்ட தேங்காய் இந்தாண்டு கடும் விலை சரிவை சந்தித்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, தேங்காய் விலையைக் குறைத்துள்ளனா்.

இதற்குமேலும் தேங்காய் விலை நிா்ணயத்தில் அரசு தலையிடாமல் இருந்தால் தென்னை விவசாயிகளின் நிலை மோசமானதாகிவிடும்.

கடைகளில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ.10க்கு விற்பனையாகிறது. ஆனால், தேங்காய் கொள்முதல் விலை வெறும் 8 ரூபாய் என்றால், விவசாயிகளின் நிலையை அரசு நினைத்துப் பாா்க்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT