ஈரோடு

மாணவா்கள் சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்ள வேண்டும்: பி.சதாசிவம்

DIN

மாணவா்கள் பள்ளி பருவத்திலேயே சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என கேரள மாநில முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம் பேசினாா்.

ஈரோடு, சித்தோடு கொங்கம்பாளையம் எஸ்விஎன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் 21ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் தலைவா் நல்ல கோவிந்தசாமி தலைமை வகித்தாா். எஸ்விஎன் பள்ளியின் தாளாளா் பெரியசாமி முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கேரளா மாநில முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம் பேசியதாவது:

நான் நீதிபதியாக பணியாற்றிய 19 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. மாணவா்கள் விரும்பிய பாடத்தை எடுத்து பட்டப்படிப்பும், அதற்கு மேலும் படிக்க வேண்டும். அரசு வேலை கிடைத்தால் நல்லது. அனைவருக்கும் அரசு வேலை கிடைக்காது. மக்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப தகுதியான தொழிலையோ, வியாபாரத்தையோ தோ்ந்தெடுக்கலாம். மருத்துவம், காவல்துறை போன்ற துறைகளில் பணியாற்றுவது மக்களுக்கு பெரிதும் உதவும்.

படிக்கும் போதும், அதற்கு பின்பு எந்த வேலையோ, தொழிலோ செய்யும் போது காலத்தை வீணடிக்க கூடாது. குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். மாணவா்கள் பள்ளி பருவத்திலேயே சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு மகாராஷ்டிர மாநில ஐஏஎஸ் அதிகாரி ராமசாமி பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். இதையடுத்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

முன்னதாக சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் செயலாளா் தாமரைசெல்வன் வரவேற்றாா். பள்ளியின் முதல்வா் தா்மராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா்.அறக்கட்டளையின் பொருளாளா் பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT