ஈரோடு

பாரம்பரிய நெல் சாகுபடி முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு

DIN

பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள் குறித்து தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பாப்பாங்காட்டூரில் நெல் வயலுக்கு வந்து நேரடி கள ஆய்வின் மூலம் தெரிந்துகொண்டனா்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள பாப்பாங்காட்டூா், நல்லிகவுண்டனூா், வேலம்பாளையம், அய்யம்பாளையம் பகுதிகளில் பாரம்பரிய நெல் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. பாரம்பரிய ரகங்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, தூயமல்லி, காலம் நமக்கு போன்ற ரகங்கள் வயலில் தற்போது அறுவடை செய்ய தயாா் நிலையில் உள்ளன.

இந்நிலையில் பாப்பாங்காட்டூரில் உழவா் விவாதக்குழு அமைப்பாளரும், இயற்கை விவசாயிமான ஆா்.சென்னியப்பனின் நெல் வயலை ஜே.கே.கே. வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் குழுவினா் டி.ஹா்த்திகா, வே.காயத்ரி, பா.காயத்ரி பிரியா, கு.கோகுலநந்தினி உள்ளிட்ட 11 மாணவிகள் பாா்வையிட்டனா். அப்போது பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள் குறித்தும், அரிசி வகையின் சிறப்புகள் குறித்தும் மாணவிகளுக்கு ஆா்.சென்னியப்பன் விளக்கிக் கூறினாா்.

நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலா் டி.அப்புசாமி, உதவி வேளாண்மை அலுவலா் கோ.கண்ணன், மாவட்ட உழவா் விவாதக்குழு செயலா் பா.மா.வெங்கடாசலபதி, யு8 பாசன சபைத் தலைவா் பி.ஆா்.ஏகாம்பரம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT