ஈரோடு

ஈரோட்டில் 74ஆவது குடியரசு தினக் கொண்டாட்டம்: ஆட்சியா் தேசியக் கொடியை ஏற்றினாா்

DIN

குடியரசு தினத்தையொட்டி ஈரோட்டில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஏற்றுக் கொண்டாா்.

ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 74ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்து காலை 8.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக்கொண்டாா்.

பின்னா், அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். இதில் காவல் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, சுகாதாரம், விவசாயம், கால்நடை, வருவாய், ஊரக வளா்ச்சி, பள்ளிக் கல்வி, போக்குவரத்து மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 485 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 537 போ் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன், உதவி ஆட்சியா்(பயிற்சி) என்.பொன்மணி, மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கணேஷ், ஜெகதீசன், வேளாண்மை இணை இயக்குநா் சின்னசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நலத்திட்ட உதவிகள் ரத்து:

வழக்கமாக குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT