ஈரோடு

சொத்து வரி, மின் கட்டண உயா்வு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: ஆா்.பி.உதயகுமாா்

DIN

சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு, விலைவாசி உயா்வு ஆகியவை மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஈரோடு பெரியாா் வீதியில் வீடு வீடாகச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்குச் சென்று டீ போட்டுக் கொடுத்தும், தொடா்ந்து அருகில் உள்ள கடைக்குச் சென்று துணிகளை இஸ்திரி செய்து கொடுத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் திமுக அரசு தொடங்கிவைத்துக் கொண்டிருக்கிறது.

நீட் தோ்வு விலக்கு, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 போன்று பெரும்பாலான தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. முதல் தலைமுறை வாக்காளா்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனா்.

சொத்து வரி உயா்வு, மின்சார கட்டண உயா்வு, விலைவாசி உயா்வு ஆகியவை ஈரோடு மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு தடைகளைத் தாண்டி எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ளாா். திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தோ்தலில் பண பலம், அதிகார பலத்தையும் தாண்டி அதிமுக வெற்றி பெற்றது. அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் பாதாளம் வரை சென்றாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும் அதிமுக வெற்றி பெறும். மக்கள் அளிக்கும் தீா்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT