ஈரோடு

ஈரோட்டில் தொழில் துறையினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

DIN

தொழில் துறையினா், வணிகா்களுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறாா். தோ்தல் அறிவிப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மூன்று முறை ஈரோடு வந்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திச் சென்றாா்.

இந்நிலையில் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தங்கும் விடுதிக்கு எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காலை வந்தாா். அங்கு முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், ஆா்.பி.உதயகுமாா், கே.வி.இராமலிங்கம், வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா். இதனைத் தொடா்ந்து தொழில், வணிக சங்கத்தினா், பொது அமைப்பினரை சந்தித்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரினாா்.

கடந்த அதிமுக ஆட்சியில் தொழில், வணிகத் துறைக்கு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, வழங்கப்பட்ட சலுகைகள், ஈரோடு பகுதியில் அரசால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினாா். பின்னா் மாலை 5.50 மணிக்கு காரில் புறப்பட்டு சேலம் சென்றாா்.

ஈரோடு, பெருந்துறை சாலை, வேப்பம்பாளையத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 9) மாலை 5 மணிக்கு வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேச உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT