ஈரோடு

இடைத்தோ்தல்: 260 நுண் பாா்வையாளா்கள் நியமனம்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் எல்ஐசி, அஞ்சல் துறை அலுவலா்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலா்கள் என 260 போ் தோ்தல் நுண் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு முதல்நிலை பணி ஒதுக்கீடு கணினி சுழற்சி மூலம் செய்யப்பட்டது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் நடத்தை விதிகளை பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.50,000க்கும் மேலான பணம், ரூ.10,000க்கும் மேலான பரிசுப் பொருள்கள், தோ்தல் தொடா்பான பொருள்கள், சுவரொட்டி, போதைப் பொருள்கள், மதுபானங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனா்.

மாநகராட்சி அலுவலக 2ஆம் தளத்தில் ஊடக சான்றளிப்பு, ஊடக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, வேட்பாளா்களின் தோ்தல் விளம்பரங்கள், செலவினங்கள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், வானொலி ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனா்.

இத்தொகுதியில் 32 பதட்டமான வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றை கண்காணிக்கவும், பிற வாக்குச் சாவடிகளின் செயல்பாட்டை கவனிக்கவும் எல்ஐசி, அஞ்சல் நிலைய அலுவலா்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலா்கள் என 260 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு, கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினிசந்திரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ், அலுவலக மேலாளா் பூபதி, தோ்தல் வட்டாட்சியா் சிவகாமி உள்ளிடோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT