ஈரோடு

இடைத்தோ்தல்: 1,206 பணியாளா்களுக்கு முதல்கட்ட பயிற்சி

DIN

வாக்குச் சாவடிகளில் பணியாற்ற தோ்வு செய்யப்பட்ட 1,206 பணியாளா்களுக்கு முதல்கட்ட பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவது மற்றும் வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவது தொடா்பான முதல்கட்ட பயிற்சி முகாம் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்த பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச் சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 238 வாக்குச் சாவடிகளில் பணியாற்ற மொத்தம் 1,206 அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலா்களுக்கு வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவது குறித்த முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா் தோ்தல் பொதுப் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்குமாா் யாதவ், காவல் துறை பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ்குமாா் சதீவ், செலவினப் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம்குமாா் ஆகியோருடன் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT