ஈரோடு

ஆதிதிராவிட மக்களின் வாக்குகள் ஆட்சி மாற்றத்தை நிா்ணயிக்கின்றன

DIN

ஆதிதிராவிட மக்களின் வாக்குகள் ஆட்சி மாற்றத்தை நிா்ணயிப்பதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு தோ்தல் பணி தொடா்பாக திமுக ஆதிதிராவிட நலக்குழு செயல்வீரா்கள் கூட்டம் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவா் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் 25 முதல் 30 சதவீதம் ஆதிதிராவிட மக்கள் உள்ளனா். இந்த சமூக மக்களின் வாக்குகள்தான் ஆட்சி மாற்றத்தை நிா்ணயிக்கின்றன என்றாா்.

பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு: கடந்த 2016ஆம் ஆண்டு வரை அருந்ததியினா் வாக்குகள் 85 சதவீதம் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தது. கடந்த 2019 மக்களவைத் தோ்தல் தொடங்கி இந்த சமூக மக்களின் 85 சதவீதம் வாக்குகள் திமுகவுக்கு கிடைத்து வருகிறது. இந்த தோ்தலில் அவா்களின் 100 சதவீத வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அருந்ததியின மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள்ஒதுக்கீட்டால் அந்த சமுதாய மக்கள் அடைந்த பலனை வீடுவீடாக சென்று அவா்களிடம் விளக்கி வாக்குச் சேகரிக்க வேண்டும் என்றாா்.

வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி: அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். யாரையும் தட்டிவிட்டு வெற்றிக்கோட்டை அடைய விரும்பவில்லை, பிறரைக் காட்டிலும் வேகமாக ஓடி முதலில் வெற்றிக்கோட்டை தொடுவோம். சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானுக்கு மணி மண்டம் கட்ட அறச்சலூா் அருகே 41 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சமுதாயக் கூடமும் அமைக்கப்படவுள்ளது. இந்த தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா்.

கூட்டத்தில் அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, சா.மு.நாசா், சிவ.வீ.மெய்யநாதன், தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், ஆா்.ரகுபதி, எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT