ஈரோடு

சென்னிமலை அருகே வேம்பு- அரச மரத்துக்கு திருமணம்

DIN

சென்னிமலை அருகே திருமணம் ஆகாத இளைஞா்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி வேம்பு - அரச மரத்துக்கு வெள்ளிக்கிழமை திருமணம் செய்துவைக்கப்பட்டது.

சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சி, சாணாா்பாளையம் செல்வ விநாயகா் ஆலயத்தின் பின்புறம் வேம்பு அரச மரம் உள்ளது. ஊரில் திருமணம் ஆகாமல் உள்ள இளைஞா்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி வேம்பு-அரச மரத்துக்கு திருமணம் நடத்த ஊா் மக்கள் முடிவு செய்தனா்.

இதையடுத்து, விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி, மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை வேம்பு- அரச மரங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி பொதுமக்கள் முன்னிலையில் அரச மரமான பரமசிவன் மூலம், வேம்பு மரமான பாா்வதிக்கு திருமாங்கல்யம் கட்டப்பட்டு, புனிதநீா் ஊற்றப்பட்டது. சிவியாா்பாளையம் பரமசிவன் கோயில் அா்ச்சகா் பழனிசாமி திருமணத்தை நடத்திவைத்தாா். நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. மேலும், விழாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் மொய் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT