ஈரோடு

சென்னிமலை ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்:நாளை நடைபெறுகிறது

DIN

சென்னிமலை ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் புதன்கிழமை தீா்த்த குடங்களுடன் பக்தா்கள் ஊா்வலமாக கோயிலுக்குச் சென்றனா்.

சென்னிமலை ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பக்தா்கள் கொடிவேரி சென்று தீா்த்தம் எடுத்தனா். பின்னா் தீா்த்தக் குடங்களுடன் அறச்சலூா் சாலையில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து மேள, தாளங்கள் முழங்க பக்தா்கள் ஊா்வலமாகப் புறப்பட்டு 4 ராஜ வீதிகளை வலம் வந்து ஐயப்பன் கோயிலுக்குச் சென்றனா்.

வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் 2ஆம் கால யாக பூஜையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளும், மாலை 5 மணிக்கு மேல் 3ஆம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி பூா்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினா் மற்றும் ஐயப்ப பக்தா்கள் வழிபாட்டு மன்ற நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT