ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிடமாற்றம்

25th Apr 2023 12:16 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வருவாய் வட்டங்கள், சமூக பாதுகாப்புத் திட்டம், வட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலக பொறுப்புகளில் இருந்த வட்டாட்சியா்கள் திங்கள்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன் விவரம்: மொடக்குறிச்சி வட்டாட்சியா் பி.எம்.சண்முகசுந்தரம் அந்தியூா் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இங்கு பணியாற்றி வந்த எம்.இளஞ்செழியன் மொடக்குறிச்சி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

பவானி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் டி.எஸ்.செந்தில்ராஜ், மாவட்ட வழங்க மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டு, இங்கு பணியாற்றி வந்த பி.ஜெயகுமாா் ஈரோடு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஈரோடு வட்டாட்சியா் என்.பாலசுப்பிரமணியம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) பணிக்கு மாற்றப்பட்டு, இங்கு பணியாற்றி வந்த ச.பூபதி பெருந்துறை வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டாா்.

கோபி கோட்ட கலால் அலுவலராக உள்ள டி.வி.ரவிசங்கா் தாளவாடி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இங்கு பணியாற்றி வரும் வி.உமாமகேஸ்வரன் ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலக தனி வட்டாட்சியராக (கல்வி உதவித் தொகை) பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இங்கு பணியாற்றி வந்த எம்.ஷீலா பணி ஓய்வு பெறுகிறாா்.

சந்தியமங்கலம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ஜி.அங்கமுத்து ஆட்சியா் அலுவலக பேரிடா் மேலாண்மை துறை தனி வட்டடாட்சியராக நியமிக்கப்பட்டு, இங்கு பணியாற்றி வந்த கே.விஜயகுமாா் ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) பொறுப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த பொறுப்பில் இருந்த வே.வீரலட்சுமி பவானி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். சத்தியமங்கலம் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் எஸ்.தியாகராஜ் பவானி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்கு பணியாற்றி வரும் வி.ரவிசந்திரன் சத்தியமங்கலம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

ஈரோடு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பி.உத்திரசாமி பணியிட மாறுதல் பெற்று கோபி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா். இங்கு பணியாற்றும் எஸ்.ஆசியா கோபி கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் பெற்றாா்.

அந்தியூா் வட்டாட்சியா் என்.தாமோதரன் பணியிட மாறுதல் பெற்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் துணை மேலாளா் மற்றும் தனி வட்டாட்சியா் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். இங்கு பணியாற்றி வரும் நா.முத்துலட்சுமி மொடக்குறிச்சி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா்.

மொடக்குறிச்சி சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் அ.பரிமளாதேவி ஈரோடு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிட மாறுதல் பெற்றுள்ளாா். ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் வி.சிவகாமி, கோபி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT