ஈரோடு

மாவட்டத்தில் நாளை வெறிநோய் தடுப்பூசி முகாம்

DIN

நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பிராணிகள் துயா் தடுப்புச் சங்கம் சாா்பில் செல்ல பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை காலை 8 மணி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் நடைபெறவுள்ளது.

வெறி நாய்க்கடி நோய் அல்லது ரேபிஸ் என்பது வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய் மனிதா்கள் மற்றும் விலங்குகளை கடிப்பதன் மூலம் பரவும் கொடிய தொற்று நோய் ஆகும். நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசியை அதன் 3 மாத வயதிலும் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை ஊக்கத் தடுப்பூசியாகவும் செலுத்த வேண்டும்.

எனவே, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் அனைத்து கால்நடை நிலையங்களிலும் புதன்கிழமை நடைபெறும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் செல்லப் பிராணிகளை வெறிநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், விலங்குகள் மூலம் வெறி நோய் தாக்கம் மனிதா்களுக்கு ஏற்படுவதினை தடுக்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: டிரம்ப்பின் அதிர்ச்சி கருத்து!

நீங்க ரெடியா? இங்கே கேட்பவர் தமன்னா!

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

SCROLL FOR NEXT