ஈரோடு

கொடுமுடியில் விரைவு ரயில்கள்நின்று செல்லக் கோரிக்கை

DIN

கொடுமுடியில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொடுமுடி உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுச் செயலாளா் ராஜா சுப்ரமணியன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய மனு:

கொடுமுடி சுற்றுலாத் தலமாகவும், கொங்கு 7 ஸ்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதனால், தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், கேரளம், ஆந்திர மாநில பக்தா்கள் தினமும் வருகின்றனா். ஆடி 18, சித்திரை தோ்த்திருவிழா, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக் காலங்களில் லட்சக்கணக்கானோா் இங்கு வருகின்றனா்.

கரோனா காலத்துக்கு முன்பு கொடுமுடியில் நின்று சென்ற தூத்துக்குடி-மைசூரு, எா்ணாகுளம்- காரைக்கால், கோவை- ராமேஸ்வரம் உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் தற்போது கொடுமுடியில் நிற்பதில்லை. மேலும், மயிலாடுதுறை- மைசூரு, கோவை- மயிலாடுதுறை (ஜன சதாப்தி), கோவை- மன்னாா்குடி (செம்மொழி எக்ஸ்பிரஸ்), கோவை- நாகா்கோவில் உள்ளிட்ட 4 விரைவு ரயில்களும் கொடுமுடியில் நிற்காமல் செல்கின்றன.

இதனால், கொடுமுடிக்கு வரும் பக்தா்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். மக்களின் நலன்கருதி, நிற்காத ரயில்களை கொடுமுடியில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுமுடி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுத்த வேண்டும். அதற்கென அலுவலகம், பணியாளரை நியமிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT